பேருந்து பயணிகளிடம் மட்டுமே கைவரிசை.. முதலமைச்சர் தொகுதியில் பதுங்கிய பலே கில்லாடி..!!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2025, 5:18 pm
மயிலாடுதுறையில் ஒரு வழக்கில் தொடர்புடைய அழகிரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகராட்சி, மாரிமனுவீதியில் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்தனர்.
இதையும் படியுங்க: குளியலறையில் ரகசிய மேகரா.. மிசோரத்தில் இருந்து கண்டு ரசித்த ராணுவ வீரர் : குமரியில் டுவிஸ்ட்!
அழகிரியை சுற்றி வளைத்து கைது செய்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து மயிலாடுதுறைக்கு அழைத்து சென்றனர். தமிழகத்தில் பல மாவட்டத்தில் பஸ்களிலும், வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த அழகிரி திருட்டிற்கு பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த தொகுதியான குப்பத்தில் தங்கி அங்கிருப்பவர்களிம் வேலை செல்வது போல் நாடகம் ஆடி வந்துள்ளார்.

தமிழக போலீசார் திடிரென வந்து அழகிரியை கைது செய்ததால் அங்கிருந்த ஆளும் கட்சியினர் அவரை அழைத்து செல்லாமல் இருக்க முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்து ஊடகத்தினர் அங்கு சென்றதால் போலீசார் அழகிரியை கைது செய்து அழைத்து சென்றனர்.
