சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கிய ராஜமௌலி? அப்படி என்ன சொல்லிட்டாருனு இப்படி பொங்குறாங்க!

Author: Prasad
20 May 2025, 1:55 pm

ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி

கடந்த மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படமும் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அத்திரைப்படம் சரியாக போகவில்லை. 

ss rajamouli praises tourist family movie in x account

படக்குழுவினர் உலகளவில் ரூ.200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தாலும் ரசிகர்கள் பலரும் “200 கோடிகளுக்கு மேல் வசூல் ஆக வாய்ப்பே இல்லை” என விமர்சித்து வந்தனர். எனினும் மறுபக்கம் “டூரீஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல நாட்களாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையரங்கம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. 

செம படம்

“டூரிஸ்ட் ஃபேமிலி என்ற மிகவும் அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். மனதை கவர்ந்த திரைப்படமாகவும் நகைச்சுவை மூட்டும் திரைப்படமாகவும் அமைந்திருந்தது. படம் தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்வமூட்டும் விதமாகவும் இருந்தது. அபிஷன் ஜீவிந்த் மிகச்சிறப்பாக இயக்கியிருந்தார். அவரது எழுத்தும் சிறப்பாக இருந்தது. சமீப ஆண்டுகளில் மிகச் சிறந்த திரை அனுபவத்தை தந்ததற்கு நன்றி. படத்தை யாரும் தவறவிட்டுவிடாதீர்கள்” என்று ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியிருந்தார். 

சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்தை “டூரிஸ்ட் ஃபேமிலி” ஓவர்டேக் செய்த நிலையில் ராஜமௌலியின் பதிவை பார்த்த பல சூர்யா ரசிகர்கள், கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிய வருகிறது. 

  • abishan jeevinth debut as a hero in new movie பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகும் ஃபீல் குட் படத்தின் இயக்குனர்? அடடா…