கசாப்புக்கடைக்காரர்னா கேவலமா? ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை திரித்து பரப்பும் நெட்டிசன்கள்!

Author: Prasad
20 May 2025, 4:33 pm

பெரிய பாய்னு கூப்புடாதீங்க

ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் பலரும் பெரிய பாய் என்று செல்லமாக குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஒரு யூட்யூப் சேன்னலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் நிருபராக இருந்த திவ்யதர்ஷினி, “பெரிய பாய்” என்று அவரை குறிப்பிட்டபோது, “இனிமேல் என்னை பெரிய பாய் என்று அழைக்கவேண்டாம். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் என்ன கசாப்புக்கடையா வைத்திருக்கிறேன்” என கூறினார். 

இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் “கசாப்புக்கடை வைத்திருப்பது என்ன கேவலமா?” என்று ரஹ்மானை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் யூ டர்ன் என்ற பிரபல உண்மை சரிபார்க்கும் தளம் இது குறித்து ஒரு தெளிவான உண்மையை கூறியுள்ளது. 

திரித்து பரப்பும் நெட்டிசன்கள்

யூ டர்ன் தளம் தனது எக்ஸ் தளத்தில் “என் பேரு பெரிய பாயா? நான் என்ன கசாப்புக்கடையா வச்சிருக்கேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாகக் கூறி சமூக ஊடகங்களில் சர்ச்சையாக பரவி வரும் செய்திகள் தவறானவை. 

பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம், உங்களை பெரிய பாய் என்று அனைவரும் அழைப்பதாக கூறியதும், ஏ.ஆர்.ரஹ்மான், “பெரிய பாயா? வேணாம் எனக்கு பிடிக்கல” என்று கூறுகிறார். 

உடனே அதற்கு திவ்யதர்ஷினி, “பிடிக்கலையா..அப்ப  கட்!” என்று கூறுகிறார். அதற்கு “என்ன ‘கட்’ னா? கசாப்புக்கடையா வச்சிட்டிருக்கேன்?” என்று கூறுகிறார். இதை பலரும் தவறாக திரித்து பரப்புகின்றனர்” என அந்த வீடியோவுடன் விளக்கத்தை பகிர்ந்துள்ளது.

இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் கசாப்புக்கடை வைத்திருப்பதை இழிவாக கூறவில்லை என்று தெரிய வருகிறது. 

  • suriya 46 movie silet producer is gnanavel raja படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!
  • Leave a Reply