படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு : CM ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2025, 5:08 pm

நிதி ஆயோக் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சி, அரசியல் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துதல் உட்பட பல்வேறு நோக்களுக்காக கொண்டு வரப்பட்டது.

இதையும் படியுங்க: ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிய சேஸிங்… லாரி திருடனை உயிரை பணயம் வைத்து துரத்திய காவலர்.. (வீடியோ)!

நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடி இருந்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையில் மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு முறைப்படி அழைப்பு விடுத்து கூட்டம் நடக்கும். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் டெல்லியில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 23ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Edappadi Palanisamy criticizes the Chief Minister

இந்த நிலையில் முதலமைச்சர் டெல்லி செல்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்… இன்று… டாஸ்மாக்… தியாகி… தம்பி… வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு! என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?