வாகன ஓட்டிகளே உஷார்! இனி இந்த 5 விதிகளை மீறினால் கட்டாய அபராதம்? 

Author: Prasad
21 May 2025, 11:18 am

பொதுவாக வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றே. அவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களால் சில நேரங்களில் மிகப் பெரிய சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவது உண்டு. 

அது மட்டுமல்லாது விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுமே விபத்தில் சிக்குவது உண்டு. உதாரணத்திற்கு தலைக்கவசம் அணியாமல் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் பலர் உண்டு. 

குறிப்பாக சென்னை நகரை நாம் தனியாக கூறத்தேவையில்லை. பல வாகன ஓட்டிகளால் அன்றாடம் பல விதிகள் மீறப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் அதிகம் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் பல சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பது உண்டு. 

compulsory penalty for violating these 5 traffic rules

ஆனால் விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது தொந்தரவாக உள்ளதாக பல பேச்சுக்கள் அடிபட்டன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவலர்கள் கும்பல் கும்பலாக சாலைகளில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி கட்டாய அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இனி 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே கட்டாய அபராதம் என்று கூறியுள்ளார்.

அதாவது, 

தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்

தவறான திசையில் (Wrong Side) பயணித்தல்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்

ஒரே வாகனத்தில் டிரிபிள்ஸ் (3 பேர்) செல்வது

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

ஆகிய 5 வித விதிமீறல்களுக்கு மட்டுமே இனி கட்டாய அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

  • enforcement department may round up sivakarthikeyan simbu and dhanush அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இந்த நடிகர்கள்தான்? ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள்!
  • Leave a Reply