திரிஷாவுக்கு ஜோடி கமலா? சிம்புவா? பலரின் சந்தேகத்தை கிளியர் செய்த தக் லைஃப் படக்குழு?

Author: Prasad
21 May 2025, 6:43 pm

எகிறும் எதிர்பார்ப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோருடன் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. 

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஒரு கேங்கஸ்டர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக டிரெயிலரை பார்க்கும்போது தெரியவருகிறது. இந்த டிரெயிலரில்  கமல்ஹாசன் அபிராமியுடனும் திரிஷாவுடனும் நெருக்கமாக இருக்கும் காட்சித் துணுக்குகள் வெளிவந்தது. எனினும் சிம்புதான் திரிஷாவுக்கு ஜோடி என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

thug life movie second single sugar baby released

வெளியானது இரண்டாவது சிங்கிள்

இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “சுகர் பேபி” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் திரிஷாவுக்காக உருவாக்கப்பட்ட பாடலாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் ஒரு நபரை காதலித்து அடைவதற்கான சந்தோஷத்தில் பாடுவது போல் அமைந்துள்ளது. மேலும்  இதில் திரிஷா சினிமா படப்பிடிப்பில் பாடி நடிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் அவர் “சுகர் பேபி” என்று குறிப்பிடுவது கமல்ஹாசனைத்தான் என தெரிய வருகிறது. இதன் மூலம் கமல்ஹாசனுக்கு திரிஷா, அபிராமி ஆகிய இரண்டு ஜோடிகள் இதில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. அப்படி என்றால் சிம்புவிற்கு?

“ஜிங்குச்சா” பாடலில் இடம்பெற்ற சான்யா மல்ஹோத்ரா சிம்புவுக்கு ஜோடியாக இருப்பார் என அப்பாடலின் மூலம் தெரிவந்ததாக ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.  எனினும் “சுகர் பேபி”  பாடலின் வரிகளை பார்க்கும்போது திரிஷா இத்திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வியூகிக்கப்படுகிறது. 

  • Recursion to lip lock Abhirami: The film crew is stunned by Kamal Haasan's speech..!!அபிராமிக்கு லிப் லாக் அடிக்க ரிகர்சல் : கமல்ஹாசன் பேச்சால் கப்சிப்பான படக்குழு..!!
  • Leave a Reply