திமுக எம்எல்ஏவுக்கும், பாஜக நிர்வாகிக்கும் மோதல்.. பிரதமருக்கு நன்றி சொல்லவில்லை என குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2025, 12:54 pm

இந்திய முழுவதும் அமிர்த நிலைய திட்டத்தின் கீழ் புனர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று பாரத பிரதமர் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

அமிர்த நிலைய திட்டத்தின் கீழ் 6.77கோடி செலவில் புனர்பிக்கப்பட்ட திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்தையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படியுங்க: ரூ.15,000 பணத்துக்காக கொத்தடிமையாக விடப்பட்ட 9 வயது சிறுவன் : சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

இந்நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்ட்டி, திருச்சி ரயில்வே கோட்டா பொது மேலாளர் அன்பழகன் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்த போது திருச்சியில் பல்வேறு பணிகளுக்கும், புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே பழனியாண்டி யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும் உட்க்கார் என தெரிவித்தார். இதன் காரணமாக சிறிது நேரம் நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பழனியாண்டி தன்னுடைய உரையைப் பேசி முடித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!