கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவது ஏன்? அமலாக்கத்துறைக்கு இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2025, 1:36 pm

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை சோதனை செய்ய அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அமலாக்கத்துறை சோதனைகளின் போது அதிகாரிகளை பல மணி நேரம் தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: திமுக எம்எல்ஏவுக்கும், பாஜக நிர்வாகிக்கும் மோதல்.. பிரதமருக்கு நன்றி சொல்லவில்லை என குற்றச்சாட்டு!

மேலும், இந்த சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடைபெறுவதாக தமிழக அரசு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தமிழக அரசின் வழக்கறிஞர் சபரிஷ் சுப்பிரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுவதாகவும், ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எவ்வாறு விசாரிக்க முயல்கிறீர்கள்?

தனிநபரின் தவறுக்காக ஒரு முழு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சரியா? என்று கண்டனம் தெரிவித்தனர். முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Why are you acting against federalism? Supreme Court slams Enforcement Directorate

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

  • dhanush to be act in abdul kalam biopic directed by adipurush director இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!
  • Leave a Reply