திடீரென வைரல் ஆன நடிகை கிரணின் அந்தரங்க வீடியோ? போலீஸில் புகார் அளித்து வேண்டுகோள்!

Author: Prasad
24 May 2025, 2:22 pm

வாய்ப்பில்லாத நடிகை

பாலிவுட்டில் “யாடைன்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் கிரண். இவர் தமிழில் “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வரத்தொடங்கினார்.

actress kiran morphing video viral on internet

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அழகு பதுமையாக ஜொலித்த கிரணிற்கு ஒரு காலகட்டத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. சமீப காலமாக மிகவும் அரைகுறை ஆடையுடன் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் கிரண். இந்த நிலையில் திடீரென இவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. 

ஷேர் பண்ணா ஜெயில்தான்…

தனது அந்தரங்க வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கிரண், தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “டிஜிட்டல் முறையில் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் எனது தனியுரிமையை ஆட்கொள்ளும் வகையிலும் பரப்பப்பட்டு வருகிறது. 

actress kiran morphing video viral on internet

இது குறித்து சைபர்கிரைம் போலீஸாரிடம் நான் புகார் அளித்துள்ளேன். அப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இது போன்ற  வீடியோவை பதிவிறக்கம் செய்வதோ அல்லது பிறருக்கு பகிர்வதோ சட்டப்படி குற்றமாகும். ஆதலால் பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

  • aarti ravi advice to ravi mohan by sharing legal notice இதை கண்டிப்பா செய்தே ஆகணும்- ரவி மோகனுக்கு ஆர்த்தி கொடுத்த அட்வைஸ்! இதுக்கு ஒரு End-ஏ கிடையாதா?
  • Leave a Reply