அப்பா சத்யராஜ் காலில் விழுந்து கெஞ்சி அழுதேன்… காதலுக்காக போராடுங்கள் என திவ்யா உருக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2025, 5:08 pm
வில்லனாக சினிமாவில் அறிமுகமான நடிகர் சத்யராஜ் பின்னர் ஹீரோவானார். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தென்னக சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.
இவரது மகன், சிபிராஜ், நடிகராக உள்ள நிலையில், மகள் திவ்யாவோ அண்மையில் ஆளும் கட்சியான திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.
இதையும் படியுங்க: ரவி மோகன் மாதிரி ஆயிடாத- பொது மேடையில் வாய்விட்டு சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்…
இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் எப்படி அழுதேன், கெஞ்சினேன் என்பதை கூறியுள்ளார்.
நான் அரசியலுக்கு வருவதை வீட்டில் உள்ளவர்கள் விரும்பவில்லை. ஆனால் நான் வந்தே தீர வேண்டும் என என் தந்தை சத்யராஜ் காலில் விழுந்து அழுதேன். பிறகு அவர்கள் சம்மதத்துடன் தான் நான் திமுகவில் இணைந்தேன்.

பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்த திமுகவில் நான் பயணிப்பது மிகவும் சந்தோஷம். உங்களுக்கு காதல் இருந்தால், நிச்சயமாக போராடுங்கள். காதல் என்பது ஒரு நபர் மீதோ அல்லது ஒரு தொழில் மீதோ இருக்கலாம்.
அப்படி உங்கள் காதல் வெல்ல வேண்டும் என்றால் போராடுங்கள் அதில் தவறில்லை என்று கூறியுள்ளார். நான் சென்னை மேயராக போகிறேனா என நிறைய பேர் கேட்டு வருகிறார்கள், நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன் என கூறியுள்ளார்.