பிரச்சனை வந்தால் வெள்ளைக் கொடி ஏந்தி பிரதமரிடம் மண்டியிடுவதே அவருக்கு வேலை.. விளாசும் நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2025, 4:55 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை காயத்ரி ரகுராம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார் முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது, ஈடிக்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என கேமராவுக்கு முன்னால் சொன்னால் மட்டும் போதாது. ED அலுவலகத்திற்கு தம்பிகளை அழைத்துக் கொண்டு சென்று எதற்கும் பயப்பட மாட்டோம் என்று சொல்ல வேண்டும்.

தம்பிகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் மட்டும் கேமராவுக்கு முன்னால் வந்து நின்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் எவ்வாறு நடைபெற்றது என மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர்.

மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை தமிழ்நாடு கடனில் இருந்தாலும் சரி நாங்கள் ஊழல் செய்வோம் என்ற நிலையில் தான் இந்த அரசாங்கம் உள்ளது. தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழக மக்களுக்காக எந்தப் பிரச்சனையும் கையில் எடுக்கப் போவதில்லை.

பிரச்சனை என்றால் வெள்ளை கொடியை எடுத்துக்கொண்டு மோடியிடம் மண்டி இடுவதே வேலையாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து துறையிலும் திமுக ஊழல் செய்துள்ளது பெண்களுக்கு பாதுகாப்பில்லை ஆனால் உடன்பிறப்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.

திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது தமிழகத்தில் விதவைகள் அதிகம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். ஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் அதே திமுக மதுவை ஒழிக்காமல் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.

இதற்கு கனிமொழி என்ன பதில் சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்பு கொடியை ஏந்தி கோ பேக் மோடி என்று கூறினார்கள்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டுக்கு அல்ல தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிக்காக அல்ல தனது மகனுக்கு பிரச்சனை என்பதால் பிரதமரை சந்தித்துள்ளார் என எடப்பாடி யார் கூறியது முற்றிலும் உண்மை.

தனது மகனையும் தம்பிகளையும் காப்பாற்றவே வெள்ளைக்கொடி ஏந்தி பிரதமரை முதல்வர் சந்தித்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.

தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை. தான் மட்டும் தனியாக நின்று வெல்வேன் எனவும் உறுதியாக சொல்லவில்லை. ஆனால் தான் மட்டுமே ஆட்சி அமைப்பேன் என சொல்வது தொண்டர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். வாக்குகளை மட்டுமே பிரிப்பதற்காக விஜய் அரசியல் செய்தால் வெல்வது கடினம்.

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் வாழ்ந்தது. வரும் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

  • actor rajesh last wish was direct kamal movies ராஜேஷின் கடைசி ஆசை இதுதான்? அதுக்குள்ள இப்படியா ஆகணும்!
  • Leave a Reply