கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தீயாய் பரவும் வீடியோ : கொடூரத்தின் உச்சக்கட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2025, 3:51 pm

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மே 18 அன்று நடந்ததாக கூறப்படுகிறது, அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் கோவிலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

இதையும் படியுங்க: நீதிமன்ற நடவடிக்கைக்கும் கூச்சமே இல்லாமல் ஸ்டிக்கர்.. முதலமைச்சர் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

சிறுமியை கோவிலுக்குள் உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அவரது பாட்டியை தள்ளிவிட்டுள்ளான் அந்த கொடூரன். பின்னர் பாட்டி கூச்சலிடமே, மக்கள் ஒன்றுகூடி அவனை நையை புடைத்தனர். பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்ற அடிப்படையில் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்ததாக தெரியவந்தது. ஆனால் அவரது கொடூரமான செயலின் வீடியோ வைரலான பிறகு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, இந்த மாதிரி ஆட்களுக்கு கருணையே காட்டக்கூடாது, சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!