தமிழில் இருந்துதான் கன்னடம், மலையாளம் வந்தது.. உண்மையை ஏற்க தயங்கலாம் : கமலுக்கு திருமாவளவன் ஆதரவு!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2025, 4:34 pm

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதேபோல் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள, வில்சன், கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலை கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன்.

திருப்பி வந்த பின்னர் கருத்துக்களை தெரிவிக்கிறேன். நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது.
இந்த விவகாரத்தில் நேர்மையாக தான் விசாரணை நடந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சிபிஐ விசாரணை கேட்கலாம்.

தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவனாய பாவணர் போன்ற தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

இன்று கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம் ஆனால் வரலாறு வரலாறு தான் இது உண்மை என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!