கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டா? மர்மப்பையால் பரபரப்பு : தீவிர சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2025, 1:36 pm

இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகள் அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மும்பை, டில்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கட்டா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்க: அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் ஜெயித்திருப்போம்.. மகனும், மருமகளும் காலில் விழுந்துது கெஞ்சினர் : ராமதாஸ் பகீர்!

கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விமான நிலைய ஆணைய தகவல்களின் படி, கடந்த நிதியாண்டில் அதிகளவாக, கோவையில் இருந்து, 32.53 லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகம்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் கேட்பாரின்றி ஒரு பை கிடந்து உள்ளது. இதனை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏதேனும் வெடிகுண்டு இருக்குமோ ? என மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு உடனடியாக அந்த பையை சோதனை செய்தனர்.

Is there a bomb at Coimbatore airport... Mystery bag causes panic

அதன் பின்னர் அந்தப் பையை உள்ளே கொண்டு சென்று ஸ்கேன் செய்தனர். அதில் ஒன்றும் இல்லாததை தெரிந்து கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புத் படையினர், பின்னர் யாரோ ? ஒரு பயணி அந்த பையை விட்டு, விட்டு சென்று இருக்கலாம், யாரேனும் பையை காணவில்லை என்று புகார் கூறினால், அதனை அவர்கள் திருப்பிக் கொடுக்க எடுத்துச் சென்றனர்.

கோவை விமான நிலையத்தில் தனியாக கிடந்த பையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!