தீ VS சின்மயினு போட்டி போட்டதெல்லாம் வேஸ்ட்டாயிடுச்சே? சமூக வலைத்தளங்களில் கதறும் நெட்டிசன்கள்…

Author: Prasad
5 June 2025, 6:41 pm

தீ VS சின்மயி

“தக் லைஃப்” திரைப்படத்தில் பாடகி தீயின் குரலில் “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்பாடலை பாடகி சின்மயி பாடினார். இந்த நிலையில் தீயின் குரலை விட சின்மயி குரல் பெரிதும் ரசிக்கப்பட்டது. “தீயின் குரலை விட சின்மயி குரல்தான் மெய்மறக்கச் செய்கிறது” என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். 

சின்மயிக்கு தமிழில் பாடத் தடை உள்ளது. இப்பாடலை ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சின்மயிதான் பாடியிருந்தார். அந்த வகையில் சின்மயியை போன்ற ஒரு குரல் வளம் மிக்க பாடகருக்கு தடை போட்டுள்ளது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு

“முத்த மழை” பாடலின் சின்மயி வெர்ஷனை திரைப்படத்தில் வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில் இன்று “தக் லைஃப்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தை பார்க்கச் சென்ற ரசிகர்கள் “முத்தமழை” பாடலை திரையில் காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது படக்குழு. அதாவது இப்பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை. இவ்வாறு ஏமாற்றத்திற்குள்ளான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!