திமுக மீது மதிமுக வருத்தம்… 2026ல் கூட்டணியில் நீடிப்பது சந்தேகம்? எம்பி துரை வைகோ பரபரப்பு பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2025, 10:49 am

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சத்திரப்பட்டி சங்கீதா பழனிச்சாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை புரிந்த மதிமுக வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் நிகழ்வில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்க: திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பம்.. ரசாயனம் கலந்த பாமாயிலை வழங்கிய பிரபல நிறுவனம்!

1) திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பு மனுதாக்களில் ஏன் மதிமுக சார்பில் கலந்து கொள்ளவில்லை?

தலைவர் வைகோ அவர்களுக்கு கோவையில் திருமண நிகழ்ச்சி காரணமாகவும், தனக்கு ஒட்டன்சத்திரத்தில் முக்கிய நிர்வாகியின் திருமண நிகழ்ச்சி காரணமாகவும் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார்.

2)2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி நீடிக்குமா?

    மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் மக்கள் பணி தொடரும் எனவும், இருப்பினும் திமுகவின் மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் தலைமையும் மன வருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    உடன் மதிமுகவின் மாவட்ட செயலாளர் செல்வராகவன், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

  1. G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!