நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

Author: Prasad
17 June 2025, 1:20 pm

வடசென்னை 2?

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆவல் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. ஆனால் “வடசென்னை 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வரை தொடங்கப்படவில்லை. வெற்றிமாறன், தனுஷ் ஆகிய இருவரும் எந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்டாலும் ரசிகர்கள் “வடசென்னை 2” அப்டேட்டை குறித்து அவர்களிடம் கேட்கத்  தவறியதே இல்லை. ஆனால் இருவரும் தெளிவான பதிலை இதுவரை கூறியதே இல்லை. 

simbu next movie directed by vetrimaaran shooting spot photo leaked

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி

இந்த நிலையில் வடசென்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதையம்சத்தில் சிம்பு ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனவும் அத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில்தான் தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

இப்புகைப்படத்தில் வெற்றிமாறனுடன் சிம்பு புதிய கெட்டப்பில் தென்படுகிறார். அவருடன் இயக்குனர் நெல்சன் கையில் குடையுடன் தென்படுவது போல் தெரிய வருகிறது. வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கவுள்ள புதிய திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் சிம்பு கேங்கஸ்டராக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

simbu next movie directed by vetrimaaran shooting spot photo leaked

“வடசென்னை 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் வெற்றிமாறன் சிம்புவை வைத்து “வடசென்னை 2” படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!
  • Leave a Reply