நேற்று, இன்றல்ல, பல நாட்களாக சினிமாவில் போதைப் பொருள் பயன்பாடு : விஜய் ஆண்டனி பளிச்!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2025, 11:54 am
சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
இதையும் படியுங்க: நிஜமாகவே மணிரத்னம் மன்னிப்பு கேட்டாரா? தயாரிப்பு நிறுவனம் சொன்ன திடீர் விளக்கம்!
நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம். நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

மதுரையை பொறுத்து கதைக்களம் அமைந்தால் படம் நடிப்பேன். மதுரை மக்களின் இயல்பு அன்பு மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது.

போர் மிகவும் தவறானது. மிகவும் வருத்தமாக உள்ளது. காசாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது.
