சந்தேகத்தை கிளப்பும் பதிவுகள்? ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தள கணக்கை களவாடிய மர்ம நபர்கள்!
Author: Prasad26 June 2025, 11:30 am
ரசிகர்களை கவர்ந்த குரல்
நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற விண்வெளி நாயகன் என்ற பாடலை அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ரசிகர்களை தனது அசரவைக்கும் குரலால் கவர்ந்திழுத்தார். தற்போது லோகேஷ் கனகராஜ்ஜின் “கூலி” திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், “டிரெயின்”, “ஜனநாயகன்”, “சலார் 2” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.

நான் அவள் இல்லை…
இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ள அவர், “என்னுடைய எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பதிவிட்டவை நான் பதிவிட்டது அல்ல. எனது எக்ஸ் தளப் பக்கத்தை மீட்கும் வரை யாரும் அந்த கணக்குடன் கருத்து பரிமாறிக்கொள்ள வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தள கணக்கில் பிட் காயின் சம்பந்தப்பட்ட பதிவுகள் வெளிவந்தது. இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.