கோவை ஹவுசிங்யூனிட் 5வது மாடியில் இருந்து விழுந்து அரசு ஊழியர் பலி : தற்கொலையா? போலீசார் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2025, 12:42 pm

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை உதவி அலுவலராக பணியாற்றிவந்த கருப்புசாமி என்ற அரசு ஊழியர், இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்க: தொண்டர்களை சந்திக்காமல் நடிகையை சந்தித்த விஜய் ஒரு தலைவரா? திமுக பேச்சாளர் தரக்குறைவான விமர்சனம்!

இந்நிலையில் நேற்று இரவு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் மது அருந்திய நிலையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது, அதேபோல தொடர்ந்து மது குடித்து வந்ததால் குடும்பத்தில் சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.

தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மது போதையில் தடுமாறி கீழே விழுந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!
  • Leave a Reply