கட்சி அலுவலகத்தை காலி செய்யாத பாஜக பிரமுகருக்கு கொலை மிரட்டல்.. பட்டாகத்தியுடன் வந்த ஓய்வு பெற்ற காவலர்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2025, 2:10 pm

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எலாவூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு என்பவர் கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வரும் கட்டிடத்தை சொந்தமாக வாங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: கோவை ஹவுசிங்யூனிட் 5வது மாடியில் இருந்து விழுந்து அரசு ஊழியர் பலி : தற்கொலையா? போலீசார் விசாரணை!

வாங்கிய உடனே அலுவலகத்தை காலி செய்யுமாறு முனிரத்தினம் கூறிய நிலையில் 3 மாத காலம் அவகாசம் வழங்குமாறு பிஜேபி பிரமுகர் தியாகு கோரிக்கை வைத்த நிலையில் தினந்தோறும் தியாகுவிற்கு தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று இரவு இடுப்பளவு உயர பட்டா கத்தியுடன் பிஜேபி அலுவலகத்திற்குச் சென்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முனிரத்தினம்
அலுவலகத்தின் முன் பட்டா கத்தியை தீட்டியபடி அங்கிருந்த தியாகுவை சட்டையை பிடித்து இழுத்து அலுவலகத்தின் உள்ளே சென்று அவதூறாக பேசியதுடன் வெட்டி வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர் வந்து தடுத்தபோது அவரையும் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்தான வீடியோ இணையதளத்தில் பரவி வரும் நிலையில் ஆரம்பாக்கம் போலீசார் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். பெற்ற பெண் குழந்தையின் முன்னிலையில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முனிரத்தினம் தந்தையை வெட்ட பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!
  • Leave a Reply