நிறுத்து எல்லாத்தையும் நிறுத்து? உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் போட்ட உத்தரவு! சிக்கலில் பராசக்தி?

Author: Prasad
27 June 2025, 7:53 pm

அமைச்சர் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்தார். எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பதவியில் அமர்ந்தார். மேலும் தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

red giant last movie is coolie said by bismi

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து அவர் விலகினாலும், இப்போதும் உதயநிதி ஸ்டாலின்தான் ரெட் ஜெயண்ட் நிறுவத்தை நிர்வகித்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி, சமீபத்தில் ஒரு பேட்டியில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசியதாக பகிர்ந்துகொண்டுள்ளார். 

தேர்தல் வரை அனைத்தையும் நிறுத்த வேண்டும்?

“இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது சினிமாத்துறையே திமுக கையில்தான் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனத்தினால்தான் அடுத்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது. 

அது போல் இந்த தேர்தலில் நடந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ, முதல்வர் ஸ்டாலின் உதயநிதியை அழைத்து வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரைக்கும் சினிமா வியாபாரத்தை கொஞ்சம் மூட்டை கட்டி வையுங்கள், அதையே நமக்கு எதிராக திருப்ப வாய்ப்புள்ளது என கூறினாராம். இதன்படி தேர்தலுக்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிற கடைசி திரைப்படமாக கூலி இருக்கும் எனவும் அதன் பின் தேர்தல் வரை எந்த படத்தையும் வெளியிட மாட்டார்கள் எனவும் ஒரு தகவல் இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

red giant last movie is coolie said by bismi

“பராசக்தி” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக ஒப்பந்தமானது. இந்த நிலையில் பிஸ்மி “கூலி” திரைப்படம்தான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கடைசிப்படம் என  கூறியுள்ளார். அந்த வகையில் “பராசக்தி” படத்தின் நிலைமை என்ன என்று கேள்வி எழும்புகிறது. 

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!
  • Leave a Reply