என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!
Author: Prasad2 July 2025, 4:51 pm
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் தெலுங்கு சினிமா உலகில் அவருக்கென்று மிகப்பெரிய மார்க்கெட் உண்டு. இந்த நிலையில் அவரது பாடல் ஒன்று ஹாலிவுட்டில் காப்பியடிக்கப்பட்டு விட்டதாக ஒரு பாடகி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

ஊ சொல்றியா மாமா…
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் “புஷ்பா: தி ரைஸ்”. இத்திரைப்படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான “ஊ சொல்றியா மாமா” பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இப்பாடலை ஹாலிவுட்டில் ஒரு பாடகி காப்பியடித்துள்ளதாக தேவி ஸ்ரீ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த துர்க்கி நாட்டைச் சேர்ந்த பாடகி அதியே என்ற பாடகியின் “அன்லயானா” என்ற பாடல்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். “அன்லயானா” என்ற பாடலின் மெட்டுக்கள் அப்படியே “ஊ சொல்றியா மாமா” பாடலை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. பாடகி அதியே மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.