சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…
Author: Prasad2 July 2025, 5:52 pm
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் இவர் பெட்ரோல் பங்கில் இருந்து வீட்டிற்குச் சென்றபோது இவரது வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூவத்தூர் போலீஸார் இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மோகன் ராஜை கொலை செய்ததாக கூறப்படும் 4 பேர் நீதிமன்றத்தில் தற்போது சரணடைந்துள்ளனர்.

அதாவது கடந்த மே மாதம் மோகன் ராஜின் பெட்ரோல் பங்கில் விசிக பிரமுகர் ரகு என்பவர் மதுபோதையில் கல்லூரி மாணவரிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் அவர் பதிலுக்கு தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இதனால் ஏற்பட்ட அவமானத்தினால்தான் ஆத்திரம் ஏற்பட்ட நிலையில்தான் ரகு மோகன் ராஜை தனது ஆட்களுடன் கொலை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.