விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2025, 1:00 pm

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

வீடு வீடாக சென்று திமுகவின் சாதனையை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை செயலி மூலமாக ஆன்லைன் மூலமாக சேர்த்தார்.

இதையும் படியுங்க: வேறு மாதிரி என்றால் எந்த மாதிரி? திருப்புவனம் அஜித் மாதிரியா? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, மிழ்நாடு முதலமைச்சர் விமர்சிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தார்மீக உரிமை கிடையாது. அவரது ஆட்சியில் தூத்துக்குடியில் காக்கை குருவிகளைப் போல மக்களை சுட்டுக் கொண்டார்கள்.

அது குறித்து கேட்டபோது நான் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது.

தமிழ்நாடு முதலமைச்சர் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருபவர். இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி அவரது கடமை.

அதை உணர்ந்து செயலாற்ற கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர். கடமை உணர்வு என்ற எதுவுமே இல்லாத கொத்தடிமை எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்று பார்த்தது குறித்த கேள்விக்கு அரசியலில் எந்த ஸ்டெண்டும் எடுபடாது. ஏனென்றால் நாங்கள் மக்களின் மனதில் இருக்கின்றோம். மக்களுடைய மனதில் தலைவர் மு க ஸ்டாலின் இருக்கும் பொழுது வேறு எந்த ஸ்டெண்டும் எடுபடாது.

  • rajinikanth increased his salary on jailer 2 எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?
  • Leave a Reply