சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!
Author: Prasad3 July 2025, 2:21 pm
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இத்திரைப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோவும் மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷனும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்தான அறிமுக வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் இராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இதில் இராவணனாக யாஷ் நடிக்கிறார். மேலும் ஹனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் லட்சுமணர் கதாபாத்திரத்தில் ரவி டூபேயும் நடிக்கின்றனர்.”

இராமாயணா” திரைப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. அதே போல் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர், ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் இசையமைக்கின்றனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிரிஸ்டோஃபர் நோலனின், “இன்டர்ஸ்டெல்லார்”, “இன்செப்ஷன்” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஹான்ஸ் ஜிம்மர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் அறிமுக வீடியோ இதோ…