அஜித் மீது புகார் கொடுத்த நிகிதாவை கைது செய்யுங்க.. பின்னாடி உள்ள ஐஏஎஸ் அதிகாரி யார்?
Author: Udayachandran RadhaKrishnan3 July 2025, 2:03 pm
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அஜித் குமார் கொலை வழக்கில் புகார் அளித்த பெண் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.அது குறித்தும் தீர விசாரிக்க வேண்டும்.
இதையும் படியுங்க: விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!
அதுபோல ஏவி விட்ட அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதையும் இந்த அரசு வெளிக் உணர வேண்டும் பாதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு வெறும் வீடு மட்டும் கொடுத்தால் போதுமா அதை கட்டிக் கொடுக்க வேண்டும்.

இந்த அரசு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியாக இல்லை என்பதை வலியுறுத்துகிறேன் இன்னும் தீர விசாரிக்க வேண்டும் என்பதை தமிழக முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது இதுதான் மக்களும் விரும்புகிறார்கள் என்றார்.