என்னை மன்னிச்சிடுங்க? சூர்யா சேதுபதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!
Author: Prasad3 July 2025, 4:24 pm
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி
விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி குழந்தை நட்சத்திரமாக விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா சேதுபதியுடன் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜலட்சுமி அனல் அரசு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மிரட்டல் வந்ததாக புகார்
“பீனிக்ஸ்” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா சேதுபதி வாயில் பபுள்கம் போட்டு மென்றபடியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கினர். மேலும் அதற்கு முந்தைய விழா ஒன்றில் “என்னுடைய அப்பா வேறு நான் வேறு” என பேசியதும் ட்ரோலுக்குள்ளானது.

அந்த வகையில் இந்த வீடியோக்களை நீக்குமாறு விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். மேலும் அவ்விழாவில் தனது மகன் சூர்யா சேதிபதிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.