அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?

Author: Prasad
3 July 2025, 5:34 pm

அஜித்குமாரின் நிபந்தனைகள்

“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக அஜித்குமார் பல நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ajith kumar putting condition on producers for his next movie

தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்குமார் மீண்டும் இணையவுள்ள திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஐசரி கணேஷ் அந்த பிராஜெக்டில் இருந்து விலகிவிட்டாராம். அதனை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் அந்த பிராஜெக்ட் சென்றது. ஆனால் எவரும் தயாரிக்க முன்வரவில்லையாம்.

எந்த தயாரிப்பாளர்களும் முன்வராததற்கு அஜித்குமாரின் நிபந்தனைகள்தான் காரணம் என கூறப்பட்டது. அதாவது அஜித்குமார் ரூ.180 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதில் 50 சதவீதத்தை முன்பணமாக கேட்கிறாராம். மேலும் மீதி பணத்தை எதிர்கால தேதியிட்ட காசோலை (Post Dated Cheque) ஆக முன்கூட்டியே தரவேண்டும் என கூறுகிறாராம். அதே போல் இந்த மொத்த பணத்தையும் படப்பிடிப்பு நடைபெறும்போதே தந்துவிட வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இதனால் எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. 

ajith kumar putting condition on producers for his next movie

அதுமட்டுமல்லாது அஜித்குமார் துபாயில் ஒரு வங்கி கணக்கு வைத்திருக்கிறாராம். அந்த வங்கி கணக்கில்தான் அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் தயாரிப்பாளர்கள் பின் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. 

  • surya vijay sethupathi movie phoenix twitter review படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!
  • Leave a Reply