ரொம்ப டார்ச்சர் பண்றங்க.. என் சாவுக்கு காரணம் திமுகவினர்தான் : அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2025, 7:01 pm

தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கும் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.

இதையும் படியுங்க: கள்ளதொடர்பால் கணவன் கொலை.. இரவு முழுவதும் மனைவி செய்த பகீர் சம்பவம்!!

செல்வானந்தம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் தொழில் செய்து வந்தார். இதன் இடையில் தொழில் நஷ்டம் ஏற்பட்ட காரணமாக பணத்தை தாமதமாக செலுத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா ட்ரேடர்ஸ் உரிமையாளர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் செல்வானந்தம் 80 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று வீட்டில் வந்து மிரட்டியதாக செல்வானந்த மனைவி கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த இருவருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியான மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் என்பவர் செல்வானந்தத்தை மிரட்டி 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என மொத்தம் 85 லட்சம் ரூபாய்-க்கு காசோலையை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தொழில் நஷ்டம் அடைந்ததற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில் செல்வானந்தம் 5 லட்ச ரூபாய் கடனை செலுத்தி விட்டார். மீதமுள்ள 5 லட்சத்தை செலுத்தாமல் இருந்த போது இதுபோல பிரச்சனையே உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக தி.மு.க நிர்வாகிகள் செல்வானந்தத்தை மிரட்டி வந்ததால் மன உளைச்சலில் அடைந்த செல்வானந்தம் தனது உயிருக்கு முழு காரணம் தி.மு.க நிர்வாகிகளான மணிமாறன் மற்றும் முத்துக்குமார் என்று ஆடியோ வெளியிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து உள்ள குண்டடம் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வானந்தம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார்.

DMK is the reason for my death: AIADMK IT wing executive commits suicide

அவரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், தற்கொலைக்கு காரணமாகிய தி.மு.க நிர்வாகிகளான மணிமாறன் மற்றும் முத்துக்குமாரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றும் செல்வானந்தம் உறவினர்களும் மற்றும் அ.தி.மு.க வினரும் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்வானந்தம் மன உளைச்சலில் அழுதவாறு ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • surya vijay sethupathi movie phoenix twitter review படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!
  • Leave a Reply