படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!

Author: Prasad
4 July 2025, 12:39 pm

சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதில் சூர்யா சேதுபதியுடன் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உட்பட பலரும் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜலட்சுமி அனல் அரசு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் கூறும் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம். 

surya vijay sethupathi movie phoenix twitter review

வன்முறையை குறைத்திருக்கலாம்…

“படத்தின் முதல் பாதி முழுக்க வன்முறை அதிகமாக இருக்கிறது. அதனை சற்று குறைத்திருக்கலாம். சூர்யா சேதுபதியின் நடிப்பு அருமை. சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன” என ஒருவர் கூறியுள்ளார். 

கொமட்டுது…

“பீனிக்ஸ் படத்தை பத்தி ஒரு வார்த்தைல சொல்லணும்னா Vomit fest. சூர்யா சேதுபதியை பார்த்தால் காமெடி நடிகர் மாதிரி தெரிகிறார். படத்தின் கதை நன்றாகவே இல்லை. சண்டைக் காட்சிகள் அருமையாக உள்ளன. தயவுசெய்து பார்க்கவேண்டாம்” என ஒருவர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

சூர்யா சேதுபதியின் சிறந்த அறிமுகம்…

“பழி வாங்கும் வன்முறை கதைக்களத்தை விரும்பி ரசித்து பார்க்கும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடித்துப்போக வாய்ப்புள்ளது. சூர்யா சேதுபதிக்கு இது சிறந்த அறிமுகம். படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது” என ஒரு பாராட்டியுள்ளார்.

இவ்வாறு ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

  • vetrimaaran simbu combination movie promo to be released in theatres வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?
  • Leave a Reply