அண்ணாமலை மீது அவதூறு பரப்ப என் போட்டோவை பயன்படுத்தியுள்ளனர்.. சும்மா விடமாட்டேன்!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2025, 12:54 pm
தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி என்பவர் கட்சி பிரமுகர்களுடன் சென்று புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: போதையில் நடுரோட்டில் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பொது சொத்துக்கள் சேதம்.. அமைச்சர் தொகுதியில் அவலம்.!
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை நிகிதாவுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தன் மீது வேண்டுமென்றே அவதூறு ஏற்படுத்துவதாகவும் செந்தில் வேல் சமூக வலைத்தளத்தில் பரப்பியதாகவும் அவர் மீது எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார் பொன்னேரியில் என் மண் என் மக்கள் யாத்திரைகள் எடுத்த புகைப்படத்தை நிகிதா என ஒலிபரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்