கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2025, 7:00 pm

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22).

இவர் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு செல்வதாக கடந்த 28-ஆம் தேதி கூறி சென்றவர்,கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றோரை தொடர்பு கொண்டு, தாம் ஒடிசாவில் இருப்பதாகவும், தம்மை மர்ம நபர்கள் பிடித்து வைத்து கொண்டு பணம் கேட்பதாகவும் கூறி அழுததாகவும்,புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின்பேரில் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் காவல் துறையினர் ஒடிசாவுக்கு சென்று பார்த்த போது,ரயில் நிலையம் அருகே காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாரபுல்லா காவல் துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, மகன் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் புல்லரம்பாக்கம் காவல் துறையினர் ஆள் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

சென்னை புழல் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் ஒடிசா சென்று கஞ்சா வாங்கி வந்த போது மர்ம நபர்கள் தாக்கியதில் அஜய் உயிரிழந்ததாகவும்,அபினேஷ் தப்பி சென்ற நிலையில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடையே மர்மமான முறையில் ஒடிசாவில் அஜய் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அஜயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Thiruvallur Youth Found Dead in Odisha

அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் காவல் துறையினர் அஜயின் உறவினர்களுடன் ஒடிசா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஒடிசாவில் என்ன நடந்தது? சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் என தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா வாங்குவதற்காக ஒடிசா சென்று இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • samantha shared the experience while switched off her mobile in 3 days செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?
  • Leave a Reply