புதிய வரலாறு படைத்த இந்திய அணி… 2வது டெஸ்ட் போட்டியில் சாதனை!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2025, 8:51 am

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள் எடுத்தது, பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 407 ரன்களக்க ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்தியா.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஒட்டுமொத்தாக இந்தியா 607 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனால் 608 என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 72 ரன்கள் எடுத்தது.

5வது நாள் ஆட்ட நேர தொடங்கிய போது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி 271 ரன்களே எடுத்தது. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணி தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது

  • consumer commission notice to mahesh babu நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!
  • Leave a Reply