காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல இதயமும் கெட்டுவிட்டது… சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2025, 12:42 pm

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசியவர், காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல இதயமும் கெட்டுவிட்டது. தமிழகத்தில் தினம் தோறும் நகை திருட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க: ஒட்டுத்துணியில்லாமல் கிடந்த இளம்பெண்… அதிகாலையில் ஷாக் : பரபரப்பு சம்பவம்!

இந்நிலையில் புகார் கொடுத்த பெண்மணி மீது தொடர்கதை போல ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அடித்துக் கொல்லும் அளவிற்கு காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்த அந்த நபர் யார் ? என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் தவறு செய்த காவலர்கள் மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் போலீசாருக்கு தவறு செய்ய தைரியம் வந்துவிட்டது.

போலீஸ் தவறு செய்தால் அவர்கள் தண்டனை கட்டாயம் அடைவார்கள் என்ற நிலையை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்படி இருந்தால் தான் தவறுகள் சரி செய்யப்படும்.

விசாரணைக்கு அழைத்தவரை மரியாதை நடத்த வேண்டும் என்று முதல்வர் சொன்னாலும் அதனை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை. முதல்வர் போடும் உத்தரவு காவல்துறை முறைப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற சண்முகம், அப்போதுதான் காவல் நிலையங்களில் குற்றங்கள் குறையும் என்றார்.

என்ன தவறு செய்தாலும் தண்டிக்க பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் தான் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.மாவட்ட கண்காணிப்பாளர் மாதம் ஒரு முறை பொது மக்களை சந்திக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்போனை ஆய்வு செய்தாலே குற்றவாளிகள் கண்டுபிடித்து விடலாம் என்றவர், அஜித் குமார் கொலை வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் காவல்துறையும், தமிழக அரசும் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றார்.

காவல்துறையினர் கைது நடவடிக்கையில் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலை கடைபிடிப்பதில்லை. ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதில்லை என்றார்.

தொடர்ந்து என்கவுண்டரை ஆதரிக்கும் பொதுமக்கள் இந்த நிலை பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி காவல்துறை சித்திரவதைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என சண்முகம் கேட்டுக்கொண்டார்.

  • consumer commission notice to mahesh babu நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!
  • Leave a Reply