40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!
Author: Prasad7 July 2025, 2:40 pm
மனதை கொள்ளைக்கொண்ட நிலா…
2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் சாரா அர்ஜுன். விக்ரமின் மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிபடுத்தி நமது மனதில் நின்றவர்தான் இவர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த சாரா அர்ஜுன், “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இளம் நந்தினியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 20 வயதை அடைந்திருக்கும் சாரா அர்ஜுன் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
40 வயது ஹீரோவுக்கு ஜோடியா?
ரன்வீர் சிங் நடிப்பில் “துரந்தர்” என்ற ஒரு பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை ஆதித்யா தர் என்பவர் இயக்கி வருகிறார். ஜோதி தேஷ்பாண்டே, லோகேஷ் தர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இதில் ரன்வீர் சிங்குடன் ஆர் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்துள்ளார். “40 வயது ஹீரோவுக்கு சாரா ஜோடியா?” என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.