வீடு வீடாக சென்றாலும் திமுகவுக்கு மக்கள் விடை கொடுக்க தயாராக உள்ளனர் : டிடிவி தினகரன்!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2025, 2:31 pm
திருப்பூர் முன்னாள் மேயரும், அமமுக மாவட்ட செயலாளருமான விசாலாட்சியின் மகள் தீபிகா – சிவஹரி திருமண வரவேற்பு விழாவில், அக்கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையும் படியுங்க: இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக்கொண்டிருப்பது இபிஎஸ்தான் : அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ திமுகவினர் வீடு வீடாக சென்று நான்கு ஆண்டுகளில் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டோம் என்று என்னதான் மன்றாடினாலும் மக்கள் இந்த முறை திமுகவிற்கு விடை கொடுத்து விடுவார்கள்.
கூட்டணியில் முதல்வர் குறித்த கருத்துக்கு அமித்ஷா சொல்வது தான் எங்கள் நிலைப்பாடு என்று சொன்னேன். அதை தவறாக பரப்புகிறார்கள்.
நாளைய எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவின் மூன்று அணிகள் பாஜக கூட்டணியில் இருப்பது குறித்த கேள்விக்கு, நான் அமமுக என்று தெரிவித்தார்.