இளம் நடிகையுடன் உல்லாசம்…கரு கலைப்பு… கணவரின் மறுபக்கத்தை பார்த்து ஷாக்கான பிரபல நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2025, 1:15 pm

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்வது, விவாகரத்து செய்வது என்பது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. நினைத்தால் திருமணம், நினைத்தால் விவாகரத்து என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகை தனது ஆஸ்தான காதல் கணவரை பிரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் நடிகையான அவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார், அது ஹோம்லி என்றாலும், கிளாமர் என்றாலும் பின்னி பெடலெடுத்துவிடுவார்.

தமிழ் தெலுங்கு, கன்னடம் என பிஸியான நடிகைக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழை மறந்த அவர், மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.

பின்னர் இரு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த அந்த நடிகை, பிரபல பாடகரை காதலித்தார். இருவரும் காதலித்த நிலையில், பாடகர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அம்மணி கிளாமர் ரூட்டில் பட்டையை கிளப்பியதால் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

ஆனால் விடாப்பிடியாக இருந்த அந்த பாடகர், நடிகையை திருமணம் செய்தார். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீசியது.

அந்த நடிகை பிரபல டிவி நடுவராக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் சூட்டிங் பிஸிக்கு சென்று விடுகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பாடகர், சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னாளில் நடிகையாக சினிமாவுக்கு நுழைந்த இளம் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர். இது மனைவியான நடிகைக்கு தெரியவர ரொம்பவே அப்சட்டாகிவிட்டாராம்.

இதனால் கணவனை பிரியலாம் என முடிவெடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல், வாரம் 2 நாள் மட்டும் மனைவியுடன் இருந்து வந்ததாகவும், மீதி நாட்கள் இளம் நடிகையின் மடியில் கிடந்ததாகவும், இதனால் இளம் நடிகை கர்ப்பமாகி பின்னர் கருவை கலைத்த விஷயமும் மனைவியான நடிகைக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நடிகை, இனி கணவனே வேண்டாம் என தனது சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கியுள்ளார். இதனால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!