கையில் கத்தியுடன் முறைத்துக்கொண்ட ஹரீஷ் கல்யாண்-எம் எஸ் பாஸ்கர்? பார்க்கிங் கொண்டாட்டத்தில் களேபரம்!

Author: Prasad
6 August 2025, 2:24 pm

3 தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங்…

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான “பார்க்கிங்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் “பார்க்கிங்” திரைப்படத்திற்கு மூன்று பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த தமிழ் படத்திற்கான விருது “பார்க்கிங்” திரைப்படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழில் சிறந்த திரைக்கதைக்கான விருது “பார்க்கிங்” திரைப்படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது “பார்க்கிங்” படத்திற்காக எம் எஸ் பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

“பார்க்கிங்” திரைப்படத்தின் கதைக்கருவே இருவருக்கும் இடையில் இருக்கும் ஈகோதான். இதனை மிகவும் யதார்த்தமாகவும் நம்பும்படியும் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். இத்திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணும் எம் எஸ் பாஸ்கரும் பார்க்கிங் தகராறில் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டும் சண்டைப்போட்டுக்கொண்டும் இருப்பார்கள். இந்த நிலையில் இதே போலவே நிஜத்திலும் அவ்வாறு இருவரும் முறைத்துக்கொண்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Parking movie team celebrate getting national award

பார்க்கிங் கொண்டாட்டம்

“பார்க்கிங்” திரைப்படத்திற்கு 3 பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஹரீஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

அப்போது ஹரீஷ் கல்யாணும் எம் எஸ் பாஸ்கரும் கேக் வெட்டும் கத்தியோடு முறைத்துக்கொண்டனர். இதை ஜாலியாக செய்தனர். “பார்க்கிங்” படத்தை போலவே இதிலும் முறைத்துக்கொண்டனர். ஆனால் ஜாலியாக முறைத்துக்கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் அனைவரும் ரசித்து வருகின்றனர்.  

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!