இனி ஆட்டம் சூடுபிடிக்கப்போகுது- அஜித்குமாரின் அணியில் இணைந்த பிரபல கார் பந்தய வீரர்!

Author: Prasad
7 August 2025, 11:03 am

ரேஸர் அஜித்

அஜித்குமார் சமீப காலமாக கார் பந்தயங்களில் அதிகளவு ஈடுபாடு காட்டி வருகிறார். அஜித்குமாரின் இளமை காலத்தில் இருந்தே அவருக்கு கார், மோட்டார் போன்ற வாகனங்களில் அதிக ஈடுபாடு உண்டு. சினிமாவில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயங்களில் கலந்துகொள்ளலாம் என்பதற்காகத்தான் அவர் சினிமாவிற்குள்ளே நுழைந்தார் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு. 

பல கார் பந்தயங்களில் பல விபத்துகளில் சிக்கி அவரது முதுகில் அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது.  சில காலம் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர், தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் அவரது அணி பல போட்டிகளில் கோப்பைகளை அள்ளி வருகிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் அணியில் ஒரு பிரபல கார் பந்தய வீரர் இணைந்துள்ளார். 

Narain Karthikeyan joined in ajith kumar racing team

முன்னாள் கார் பந்தய வீரர்

இந்தியாவின் மிகப் பிரபலமான கார் ரேஸராக திகழ்ந்து பல உலக சாதனைகளை படைத்தவர்தான் நரேன் கார்த்திகேயன். இவர் தமிழ்நாட்டின் கோவை பகுதியைச் சேர்ந்தவர். பல சர்வதேச கார் போட்டிகளில் இவர் பல கோப்பைகளை வென்றுள்ளார். இவர் மிகத் திறமையான ஃபார்முலா 1 ரேஸர் ஆவார். இந்த நிலையில் நரேன் கார்த்திகேயன் தற்போது அஜித்குமாரின் அணியில் இணைந்துள்ளார். ஏசியன் லீ மேன்ஸ் என்ற கார் பந்தயத்தில் இவர் அஜித்குமாரின் அணியின் சார்பாக கலந்துகொள்கிறார். 

இது குறித்த அறிவிப்பை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். “நரேன் அணியில் இணைவது உண்மையில் எங்களது பாக்கியம். அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை” என அஜித்குமார் தெரிவித்துள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!