தனுஷுக்கு போட்டியாக மிருணாள் தாக்கூருக்கு வலை வீசும் SK?என்னப்பா சொல்றீங்க!

Author: Prasad
7 August 2025, 6:07 pm

மிருணாள் தாக்கூருடன் டேட்டிங்

நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருணாள் தாக்கூருடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. இருவரும்  இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை கொண்டு இருவரும் டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் அடித்து கூறுகிறார்கள். 

எனினும் இருவரும் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது நட்பு ரீதியாக பேசினார்கள் எனவும் இவர்களுக்கு இடையில் எந்த விதமான உறவும் இல்லை எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனாலும் தனுஷும் மிருணாள் தாக்கூரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வலை வீசும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தற்போது “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 Sivakarthikeyan put condition that book mrunal thakur as his heroine

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் எப்படியாவது மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக உள்ளே கொண்டு வரவேண்டும் என தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம். இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே தனுஷ் மிருணாள் தாக்கூருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் மிருணாள் தாக்கூரை தனக்கு எப்படியாவது கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளதாக வெளிவரும் செய்தி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!