பாடகர் கிரிஷுடன் விவாகரத்து? வெளிப்படையாக உறுதிபடுத்திய நடிகை சங்கீதா?

Author: Prasad
9 August 2025, 4:01 pm

சங்கீதா-கிரிஷ் விவாகரத்து

நடிகை சங்கீதாவும் கிரிஷும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவி வரும் செய்திகள் சமீப நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் இது குறித்தே பேசப்பட்டு வருகிறது. “கங்கோத்ரி” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சங்கீதா, தமிழில் “காதலே நிம்மதி”, “உதவிக்கு வரலாமா”,  “டபுள்ஸ்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பாலாவின் “பிதாமகன்” திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

Actress sangeetha open talks about her divorce news

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சங்கீதா கிரிஷ் என்ற தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரை “Sangitha.act”  என்று மாற்றியுள்ளார். இதுதான் ரசிகர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. சங்கீதாவும் கிரிஷும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவ தொடங்கின. 

சங்கீதா அளித்த விளக்கம்

Actress sangeetha open talks about her divorce news

இந்த நிலையில் தனது விவாகரத்து பற்றிய செய்திகள் குறித்து சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். அதாவது கணவரை பிரியப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் பொய் என கூறியுள்ளார். மேலும் நியூமராலஜி படி தனது பெயரை அவ்வாறு மாற்றிக்கொண்டதாகவும் பதிலளித்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து பற்றிய செய்திகள் அனைத்தும் வதந்தி என உறுதிபடுத்தியுள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!