ஒரு பெண் சர்ச் பாதிரியராக வர முடியுமா? ஜமாஅத்தில் தொழுகை நடத்த முடியுமா? அதை பத்தி பேசுங்க.. கொதிக்கும் மோகன் ஜி!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2025, 4:22 pm
இயக்குநரும், திமுக ஆதரவாளருமான கரு பழனியப்பன், தனியார் யூடியூப் சேனலில் நடந்த யாவரும் கேளிர் நிகழ்ச்சியில் ஆணவக் கொலை, பெண்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது கரு பழனியப்பன், வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாப்படுகிறது என்பதை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.
அப்போது நெறியாளர் ஒருவர் கிண்டலாக அதை குறிப்பிட, அரங்கமே சிரிப்பொலியை கிளப்பியது. அப்போது கரு. பழனியப்பன், வரலட்சுமி விரதத்திற்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார்.

இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி, தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இவனும் நாளைக்கு சட்டமன்ற வேட்பாளரா வந்து நிப்பான்.. ஓட்டு போட்டு சட்டமன்றதிற்கு அனுப்பி விடுங்க.. ஏன்டா ஒரு பெண் சாந்தோம் சர்ச் பாதிரியாராக வர முடியுமானு பேசி சிரிங்க.. ஒரு பெண் ஜமாஅத் உள்ளே தொழுகை நடத்த முடியுமானு பேசி சிரிங்க.. வரலட்சுமி விரதம் பற்றி மட்டும் பேசி சிரிப்பது உள்நோக்க அரசியல் .. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
