ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த 200 கிலோ நகைகள்! பொத்தி பாதுகாக்க 50 பேர்? அடேங்கப்பா…
Author: Prasad11 August 2025, 2:18 pm
பிரம்மாண்ட திரைப்படம்
கடந்த 2008 ஆம் ஆண்டு அஷுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான திரைப்படம் “ஜோதா அக்பர்”. முகலாய பேரரசர் அக்பர் மற்றும் மகாராணி ஜோதா ஆகியோருக்கு இடையேயான காதலை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவான திரைப்படம் இது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் முகலாயர்களின் காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்திருந்தது.

படத்தில் அரண்மனைகள், கோட்டைகள் போன்றவை அனைத்தும் மிக தத்ரூபமாக செட் போடப்பட்டு இருந்தது. முகலாயர்கள், ராஜபுத்திரர்கள் ஆகியோர் எப்படி எல்லாம் உடை அணிந்திருப்பார்களோ அதை எல்லாம் உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருந்தார்கள். அந்த வகையில் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உட்பட 300 கலைஞர்களும் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் உண்மையான நகைகள் ஆகும். அவை தங்கம், வைரம் மற்றும் முத்துக்களால் ஆனவை.
200 கிலோ நகைகள்
குறிப்பாக மகாராணி ஜோதா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் இத்திரைப்படத்தில் அணிந்திருந்த நகைகள் 200 கிலோ எடை கொண்டதாம். இதனை சுமக்க மிகவும் சிரமப்பட்டதாக ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இந்த நகைகளை பாதுகாக்கவே படப்பிடிப்புத் தளத்தில் 50 பேர் பாதுகாவலர்களாக இருந்தார்களாம்.

இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் நகைகளை டாடாவுக்கு சொந்தமான தனிஷ்க் என்ற நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்திருந்தன. இந்நகைகளை வடிவமைக்க 2 வருடங்கள் ஆனதாம். இவ்வாறு மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.
