கேப்டன் போட்டோவுக்கு தடை.. ஆனா ஜெ., போட்டோவுக்கு? வரம்பு மீறிய சுதீஷ்.. தர்மசங்கடத்தில் பிரேமலதா!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 1:35 pm
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி,தொகுதி, வேட்பாளர் என அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக கூட்டணியை அமைத்து அடுத்தடுத்து களப்பணியாற்றி வருகின்றனர்.
எஞ்சியிருக்கும் தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகள் கூட்டணி முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து சுற்றுப்பயணம் செய்யும் தலைவவர்கள் தற்போதைக்கு கட்சிக்கு ஆதவராக ஓட்டுக்களை கேட்டு வருகின்றனர்.
அப்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டன் போட்டோக்களை எந்த கட்சியினரும் பயன்படுத்தக்கூடாது, கூட்டணி சேரும் கட்சிகள் பயன்படுத்தலாம். சினிமாவில் கேப்டன் போட்டோவை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என கூறினார்.
இப்படி அறிவித்த சில நாட்களிலேயே அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை, எல்கே சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளார்.
அதுவும் ஜெயலலிதா புகைப்படத்துடன் பிரேமலதா போட்டோவை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது கூட்டணிக்கான அச்சாராமா? அல்லது ஜெயலலிதாவை போன்று பிரேமலதா என்று ஒப்பிட்டு சொல்ல வருகிறாரா என தெரியவில்லை.

கேப்டன் போட்டோவை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா கூறியுள்ள நிலையில், எல்.கே சுதீஷ் ஜெ போட்டோவை பயன்படுத்தியது தவறு தான் என இரு கட்சி நிர்வாகிகளும் புலம்பி வருகின்றனர். இதனால் பிரேமலதாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
