கூலி முதல் நாள் காட்சி… தியேட்டருக்கு ஓடிப் போன லோகேஷ், அனிருத் ; பரபரப்பு வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 11:58 am
ரஜினியின் கூலி திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. சினிமாவில் நுழைந்து 50 ஆண்டு காலம் ஆனதால் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் கூலி படத்தின் முதல் நாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில், நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று தமிழ்நாட்டை தவிர, அண்டை மாநிலங்களான ஆந்திராஇ கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கியது.
Dir Lokesh & Rockstar @anirudhofficial here at vetri theatre for #Coolie FDFS 🥳🔥
— Anirudh Trends (@AnirudhTrend) August 14, 2025
Let's goo 👍🏻 pic.twitter.com/G4na9vyXiu
அப்போது கூலி படத்தை பார்க்க இயக்குநர் லோகேஷ், அனிருத் சென்றனர். அவர்கள் தியேட்டருக்குள் ஓடி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
