ரெய்டு மூலம் அச்சுறுத்தலா? இதெல்லாம் திமுகவிடம் எடுபடாது : கனிமொழி எம்பி ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 1:16 pm
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது:”வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்த முடியும் என மத்திய அரசு தவறாக நினைக்கிறது. மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கு விசாரணை அமைப்புகள் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், எந்தவொரு பயமுறுத்தலாலும் தி.மு.க.வினரை அச்சுறுத்தி விட முடியாது.”தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கனிமொழி, மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
