விஜய் பட சாதனையை முறியடித்த கூலி… அதுவும் வெறும் 4 நாட்களில்..!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2025, 11:47 am
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் என்பதால் ஒரு சிலர் எதிரான கருத்துக்களை கூறினர். அதே சமயம் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாக அமைந்தது.
படத்தில் ஏகப்பட்ட டுவிஸ்ட் இருந்ததால் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.

கூலி திரைப்படம் வெளியான 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதால் உலகம் முழுவதும் வசூல் 350 கோடி ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது.
விஜய்யின் பைரவா படம் 4 நாட்களில் 100 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
