ரன்வீர் சிங் படப்பிடிப்பில் நடந்த களேபரம்? 100 பேர் மருத்துவமனையில் அனுமதி! அடக்கொடுமையே…

Author: Prasad
19 August 2025, 12:14 pm

ரன்வீர் சிங்கின் ஆக்சன் அதகளம்!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், 2010 ஆம் ஆண்டு வெளியான “பாண்ட் பாஜா பாரத்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரத்தொடங்கிய ரன்வீர் சிங், தற்போது “துரந்தர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

“துரந்தர்” திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆதித்யா தர் என்பவர்  இயக்கி வருகிறார். இதில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

100 technicians admitted in hospital because of food poison in dhurandhar shooting

100 பேர் மருத்துவமனையில் அனுமதி

“துரந்தர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 100 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனராம். 

இப்படப்பிடிப்பில் 600 பேர் கலந்துகொண்டனர். படப்பிடிப்புத் தளத்தில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 600 பேரில் 100 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது. அந்த 100 பேருக்கும் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த 100 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!