தெருநாய் விவகாரம்… டெல்லியில் அநியாயம் நடக்குது… எதிர்நீச்சல் கனிகா போட்ட வீடியோ..!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 2:15 pm
நடிகை கனிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சமீபத்திய வீடியோ ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாய்கள் மீது தனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு என்பதை தன்னைப் பின்தொடரும் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் என்று கூறிய கனிகா, தெருநாய்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் உருக்கமாக பேசியுள்ளார்.
டெல்லியில் நடக்கும் அநியாயத்தைப் பார்க்கும்போது மனசு வேதனையா இருக்கு. தெருவில் பிறந்து வளர்ந்த நாய்களை ஊருக்கு ஒதுக்குப்புறமா அடைச்சு வைக்கறது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான நாய்களை ஒரே இடத்தில் கொண்டு போய் அடைச்சு வைச்சு பாதுகாக்க முடியுமா? இது எவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்கும்? என்று கனிகா கேள்வி எழுப்பினார்.
மேலும், “நம்மை நாம பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி, ஊருக்கு ஒதுக்குப்புறமா அடைச்சு வைச்சா, நாம அதை ஏத்துக்க முடியுமா? அதே மாதிரி தானே அந்த நாய்களுக்கும் கஷ்டமா இருக்கும்?” என்று அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.
நாய்கள் கடிக்கும் பிரச்சினை குறித்து பேசிய கனிகா, “நாய் கடிக்கறது உண்மையான பிரச்சினை தான். என் பையனை ஒரு நாய் கடிச்சா, நானும் அதை ஏத்துக்க முடியாது. ஆனா, ஒரு நாய் கடிச்சதுக்காக மொத்த நாய்களையும் அழிக்கணும்னு சொல்றது எப்படி நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதோடு நிற்காமல், சமூகத்தில் நடக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையை ஒப்பிட்டு கனிகா கூறினார்: “நம்ம நாட்டில் பல கொடுமைகள் நடக்குது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கு.
ஒருத்தர் செய்யற தவறுக்காக மொத்த ஆண்களையும் தண்டிக்க முடியுமா? அது சரியா இருக்குமா?”கனிகாவைப் போலவே, நடிகை தமன்னா, நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல பிரபலங்களும் தெருநாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
